ட்ரெண்டிங்

இந்திய விமானப்படையில் சேர விரும்பும் இளைஞர்களின் கவனத்திற்கு! 

இந்திய விமானப்படையில் சோ விரும்பும் இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது,  இந்திய விமானப்படையில் சேர விரும்பும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்திய விமானப்படை தேர்வு மையத்தினால் அக்னிபாத் திட்டத்தில் அக்னி வீரர் வாயு ஆள் சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் வரும் ஜூலை 08- ஆம் தேதி அன்று முதல் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 28- ஆம் தேதி கடைசி நாளாகும். இத்தேர்விற்கு 2004 ஜூலை 03 முதல்  2008 ஜனவரி 03 வரையிலான தேதியில் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

இத்தேர்வு வருகிற அக்டோபர் 18- ஆம் தேதி அன்று இணையவழியில் நடைபெறவுள்ளது. இதற்கான கல்வி தகுதி 12- ஆம் வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அல்லது 3 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பில் 50 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் இத்தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்திய விமானப்படையில் இணைய விருப்பமுள்ள சேலம் மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் பெருமளவில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.