ட்ரெண்டிங்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! 

புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, சட்டங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன; சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசமைப்பு 348 பிரிவை தெளிவாக மீறுவதாகும். சட்டங்களை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களுடன் விவாதம்; சட்டப் பாடங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். 

மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றிய 3 சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் தரப்படவில்லை. 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. 3 குற்றவியல் சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளன. அனைத்து துறைகளுடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்த போதுமான கால அவகாசம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.