ட்ரெண்டிங்

ஜூன் 09-ல் பிரதமராகப் பதவியேற்கிறார் மோடி! வரும் ஜூன் 09- ஆம் தேதி அன்று பிரதமராக நரேந்திர மோடி

வரும் ஜூன் 09- ஆம் தேதி அன்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த 18- வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மத்தியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. பா.ஜ.க.வுக்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளித்துள்ளனர். கூட்டணி கட்சியினர் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பிரதமராக மீண்டும் பதவியேற்க நரேந்திர மோடிக்கு ஒப்புதல் கடிதம் அளித்துள்ளனர். 

இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூன் 09- ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாட்டின் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதைத் தொடர்ந்து, ஜூன் 17- ஆம் தேதி மக்களவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என்றும், ஜூன் 21- ஆம் தேதி மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.