ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் 28.92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்-வரைவு வாக்காளர் பட்டியலில் தகவல்!

 

சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான் கார்மேகம் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.27) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

 

பின்னர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் இன்று (அக்.27) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடி மையங்கள். வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 2024- ஆம் ஆண்டு ஜனவரி 01- ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி அக்டோபர் 27- ஆம் தேதி முதல் டிசம்பர் 09- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் 81.கெங்கவல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,08,107 பேரும், பெண்கள் 1,13,517 பேரும், இதரர் 8 பேரும் என மொத்தம் 2,21,632 பேரும், 82.ஆத்தூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,13,723 பேரும், பெண்கள் 1,20,322 பேரும், இதார் 16 பேரும் என மொத்தம் 2,34,061 பேரும். 83.ஏற்காடு (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,35,238 பேரும். பெண்கள் 1,40,573 பேரும். இதார் 15 பேரும் என மொத்தம் 2,75,826 பேரும். 84.ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,48,168 பேரும். பெண்கள் 1,40,493 பேரும். இதரர் 8 பேரும் என மொத்தம் 2,88,669 பேரும். 85.மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,35,366 பேரும். பெண்கள் 1,31,593 பேரும். இதரர் 15 பேரும் என மொத்தம் 2,66,974 பேரும். 86.எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,42,077 பேரும், பெண்கள் 1,37,642 பேரும், இதரர் 20 பேரும் என மொத்தம் 2,79,739 பேரும் உள்ளனர்.

 

மேலும், 87.சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,33,704 பேரும், பெண்கள் 1,30,709 பேரும். இதரர் 21 பேரும் என மொத்தம் 2,64,434 பேரும், 88.சேலம் (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,47,502 பேரும். பெண்கள் 1,48,301 பேரும், இதரர் 68 பேரும் மொத்தம் 2,95,871 பேரும். 89.சேலம் (வடக்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,29,905 பேரும், பெண்கள் 1,36,155 பேரும், இதார் 36 பேரும் என மொத்தம் 2,66,096 பேரும், 90. சேலம் (தெற்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,20,715 பேரும். பெண்கள் 1,25,654 பேரும். இதரர் 44 பேரும் என மொத்தம் 2,46,413 பேரும், 91. வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,27,212 பேரும். பெண்கள் 1,25,662 பேரும், இதரர் 20 பேரும் என மொத்தம் 2,52,894 பேரும் உள்ளனர்.

 

ஆக மொத்தம் தற்போது சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 11 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 14,41,717 எண்ணிக்கையிலும் பெண்கள் 14,50,621 எண்ணிக்கையிலும், இதரர் 271 எண்ணிக்கையிலும் இடம்பெற்றுள்ளனர், ஆக மொத்தம் 28,92,609 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

 

வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் அக்டோபர் 27- ஆம் தேதி முதல் டிசம்பர் 09- ஆம் தேதி வரை பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் www.vap.h மற்றும் www.elections.tn.gov.in என்ற முகவரியிலும், Voter helpline app என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

 

2024- ஆம் ஆண்டு ஜனவரி 01- ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7- ம், குடியிருப்பை மாற்றியதற்கும், நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8 -யை பயன்படுத்த வேண்டும்.

 

மேலும் இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்ததில் 17 வயதைப் பூர்த்தி அடைந்த நபர்களும், அதாவது 01/04/2024, 01/07/2024 மற்றும் 01/10/2024 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதைப் பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

 

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர். 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக நவம்பர் 04/11/2023, 05/11/2023 மற்றும் 18/11/2023, 19/11/2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். 09/12/2023 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 05/01/2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது." இவ்வாறு அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.