ட்ரெண்டிங்

பெற்றோரை சந்தித்த நடிகர் விஜய்! 

தனது அரசியல் பயணம் தொடங்கிய பின் முதன்முறையாக தனது பெற்றோரைச் சந்தித்தார் நடிகர் விஜய். 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், அரசியல் கட்சியைத் தொடங்கிய பின் தாய், தந்தையை நேரில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படத்தை விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.