சினிமா

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு! 

2015- ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, சிறந்த திரைப்படங்களுக்கான முதல் பரிசை 'தனி ஒருவன்', இரண்டாம் பரிசை பசங்க 2, மூன்றாம் பரிசை பிரபா, நான்காம் பரிசை இறுதிச்சுற்று ஆகிய திரைப்படங்கள் பெறுகின்றன. சிறப்பு பரிசுக்கு 36 வயதினிலேயே திரைப்படம் தேர்வுச் செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக மாதவன், சிறந்த நடிகையாக ஜோதிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சிறப்பு பரிசு நடிகர் கௌதம் கார்த்திக்கும், நடிகை ரித்திகா சிங்கிற்கும் வழங்கப்படவுள்ளன. சிறந்த திரைப்பட இயக்குநராக சுதா கொங்கரா தேர்வுச் செய்யப்பட்ட நிலையில், சிறந்த கதையாசிரியர் விருதை மோகன் ராஜா பெறவுள்ளார். சிறந்த வில்லன் நடிகராக அரவிந்த் சாமியும், நகைச்சுவை நடிகராக சிங்கம் புலியும்,  நகைச்சுவை நடிகையாக தேவதர்ஷினியும் விருதினைப் பெறுகின்றன. சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜிப்ரானும், சிறந்த பாடலாசிரியர் விருதை விவேக் ஆகியோரும் பெறுகின்றனர்.  அதேபோல், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நாளை (மார்ச் 06) மாலை 06.00 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் சிறப்பாக நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், 39 விருதாளர்களுக்குக் காசோலையும், விருதாளர்களின் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசும் மற்றும் சான்றிதழ்களையும் வழங்குகிறார்.