ட்ரெண்டிங்

கணக்கு கேட்ட உறுப்பினர்கள்.....தொடங்காமலேயே ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சி மாதாந்திரக் கூட்டம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பச்சனம்பட்டியில் ஊராட்சியின் நிதியில் இருந்து செலவழிக்கப்பட்ட 9 லட்சம் ரூபாய்க்கு உண்டான கணக்கை உறுப்பினர்கள் கேட்டதால், ஊராட்சிக் கூட்டம் தொடங்காமலேயே ஒத்திவைக்கப்பட்டது. 

மாதாந்திர கூட்டத்திற்காக, ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் சித்ரா உள்ளிட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, லதா, அமிர்தம், புஷ்பா ஆகிய ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சியின் வங்கிக் கணக்கில் இருந்து 9 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளிக்காத ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து எழுந்துச் சென்றனர்.