பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று (மார்ச் 26) சென்னையில் காலமானார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு திரைப்பட நகைச்சுவை நடிகர் சேஷுவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று (மார்ச் 26) மாலை காலமானார். நடிகர் சேஷு மறைவிற்கு திரைப்பிரபலங்கள், சக நகைச்சுவை நடிகர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சேஷி, துள்ளுவதோ இளமை என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். ரிமோட், சங்கராபுரம், வேலாயுதம், வீராப்பு, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட 21 திரைப்படங்களில் நடித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)