ட்ரெண்டிங்

அரசு மருத்துவப் பணியாளர்களுக்கு ஷிஃப்ட்! 

அனைத்து அரசு மருத்துவப் பணியாளர்களுக்கு 3 ஷிஃப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கி தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. 

அரசாணையில், அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதார நிலைய கடைநிலை ஊழியர்களுக்கு ஷிஃப்ட் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்களுக்கு ஷிஃப்ட் பணி நேரம் பொருந்தும். காலை 06.00 முதல் மதியம் 01.00 வரையும், மதியம் 01.00 முதல் இரவு 09.00 மணி வரையும், இரவு 08.00 மணி முதல் காலை 06.00 மணி வரையும் 3 ஷிஃப்ட்களில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மொத்த பணியாளர்களில் 50% முதல் ஷிஃப்ட், 25% ஊழியர்கள் 2-வது ஷிஃப்ட்டிலும், மீதமுள்ள 25% ஊழியர்கள் 3-வது ஷிஃப்ட்டிலும் பணிபுரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.