ட்ரெண்டிங்

கள்ளச்சாராய விவகாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கொண்டு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவை அரசே ஏற்கும்; பெற்றோரை இழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்தவர்களுக்கு ரூபாய் 3 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும். பெற்றோர் இருவரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை ரூபாய் 5,000 வழங்கப்படும். 

கல்விக்கட்டணம் முழுமையாக ஏற்கப்பட்டு அரசு, அரசு உதவிபெறும் விடுதிகளில் சேர்க்கப்படுவர். இந்த பிரச்சனையைக் கண்டு ஓடி ஒளிபவன் நான் அல்ல; பொறுப்பை உணர்ந்து பதிலளித்துள்ளேன். சம்பவம் தொடர்பாக, நடவடிக்கை எடுத்துவிட்டு வந்து பொறுப்போடு பதிலளித்துள்ளேன். அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை. சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும். உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் 2 நாட்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். 

விஷச்சாராய சம்பவம் தொடர்பாக அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். மெத்தனால் தணிக்கை தொடர்பான அறிக்கையையும் அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க கூடுதல் நிவாரண நிதி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.