ட்ரெண்டிங்

வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் ஆய்வு! 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வெடி விபத்து நிகழ்ந்த தனியார் பட்டாசு ஆலையில் வெடிபொருள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 

கடம்பூர் அரசு கோயில் காடு பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவரது விவசாய தோட்டத்தில் பட்டாசு தயாரிப்பு ஆலை உள்ளது. பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை எடுக்க கிடங்கிற்கு சென்ற போது, வெடி விபத்து ஏற்பட்டதில் பூலமேடு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ராஜமாணிக்கம் உடல் சிதறி உயிரிழந்தார். 

உரிமையாளர் தனசேகரன் மற்றும் நான்கு பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், ஆத்தூர் காவல்துறை டி.எஸ்.பி. சதீஷ்குமார், வெடிபொருள் பிரிவு இயக்குநர் சந்திரமோகன், சேலம் தடயவியல் துறை இயக்குநர் செந்தில் குமார் உள்ளிட்ட குழுவினர் மற்றும் வருவாய்த்துறையினர், வெடி விபத்து நிகழ்ந்த இடத்தைத் தனித்தனியாக ஆய்வு செய்தனர். 

ஆலையில் தயார் செய்துள்ள வெடிகள், வெடி மருந்துகள் மற்றும் பாதுகாப்பு, உரிமம் உள்ளிட்டவைக் குறித்து ஆய்வுச் செய்து தடயங்களைச் சேகரித்தனர்.