ட்ரெண்டிங்

ஹுப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவைகள் நீட்டிப்பு!

 

ஹுப்ளி- ராமேஸ்வரம் இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில் சேவைகளை வரும் மார்ச் 31- ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹுப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் ஜனவரி 06- ஆம் தேதி முதல் மார்ச் 30- ஆம் தேதி வரையும், ராமேஸ்வரம்- ஹுப்ளி வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் ஜனவரி 07- ஆம் தேதி முதல் மார்ச் 31- ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

வாரத்தில் சனிக்கிழமைதோறும் காலை 06.30 மணிக்கு ஹுப்ளி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 09.00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் திங்கள்கிழமை இரவு 07.25 மணிக்கு ஹுப்ளி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

 

இந்த சிறப்பு ரயில்கள், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவைகளுக்கான பயண டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.