ட்ரெண்டிங்

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு! 

தமிழகத்தில் வரும் மே 21- ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வரும் மே 21- ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும். வரும் மே 20- ஆம் தேதி அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அளித்திருந்த சிகப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை (மே 18) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (மே 18) கனமழை பெய்யக்கூடும். 

கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் கேரள கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று முதல் மே 21- ஆம் தேதி வரை செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.