சேலம் :-
சர்வதேச குழந்தைகள் தினம்: குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி – ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்.
சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் சிலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, பெரியார் சிலை வழியாகச் சென்ற பேரணி மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.
இதில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கையெழுத்து இயக்கம், செல்ஃபி ஸ்டாண்ட், வீதி நாடகம், குழந்தைத் திருமணத்திற்கு எதிரான துண்டுப் பிரசுரம் விநியோகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



