ட்ரெண்டிங்

குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்கு ஓய்வூதிய உத்தரவால் சர்ச்சை! 

சர்ச்சையில் சிக்கிய ஓய்வுபெற்ற பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவுக்கு ஓய்வூதியம் வழங்க பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதால் பேராசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்ச்சைக்கு பெயர்போன சேலம் கருப்பூரில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், ஓய்வுபெற்ற பதிவாளர் உள்ளிட்டோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாளுக்கு நாள் இந்த பல்கலைக்கழகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில், பல்வேறு சர்ச்சையில் சிக்கிய ஓய்வுபெற்ற பதிவாளர் தங்கவேலுவுக்கு ஓய்வூதியம் வழங்க பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உத்தரவிட்டிருப்பது பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஓய்வுபெற்ற பதிவாளர் தங்கவேலுவுக்கு பஞ்சப்படி ரூபாய் 1 லட்சத்துடன் மாதம் ரூபாய் 74,700 ஓய்வூதியம் வழங்க விதியை மீறி  துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார். 

துணைவேந்தரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பேராசிரியர்கள், துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  அத்துடன், ஓய்வூதியம் வழங்கும் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் பல்கலை. பேராசிரியர்கள் முடிவுச் செய்துள்ளனர்.

துணைவேந்தர் மீது 6 புகார்கள், ஓய்வுபெற்ற பதிவாளர் தங்கவேலு மீது 8 புகார்கள், தமிழ்த்துறை தலைவர் மீது 5 புகார்கள் நிரூபணமாகியுள்ளது; இதனிடையே, தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் உத்தரவின் பேரில், இரு நபர் குழு புகார்கள் குறித்து விசாரணை நடத்தியது.