ட்ரெண்டிங்

வெஸ்ட் நைல் வைரஸ்- பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்! 

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இது குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சலினால் ஏற்படும் நீரிழப்பினை தவிர்த்திட நீர், திரவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்; கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவ்டிக்கை எடுக்க வேண்டும். மூளை காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உடையவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதில்லை; எலைசா மற்றும் ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் மூலம் இந்நோயை கண்டறியலாம். காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், வலிப்பு தசை பலவீனம் உள்ளிட்டவை நோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.