ட்ரெண்டிங்

வேகத்தடை அருகே மின்கம்பங்களை அமைக்கக் கூடாது என உத்தரவு! 

சாலையோரம் அமைக்கப்படும் மின் கம்பங்களை வேகத்தடைகளைத் தாண்டிப் பாதுகாப்பாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மின்கம்பத்தால் ஏற்படும் தொடர் விபத்துகள் குறித்து மின்சார வாரியம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது. மின்கம்பம் தொடர்பாக அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

அதில், பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும்; சாலையின் நடுவில் மின்கம்பங்கள் இருந்தால் அதை அகற்றி பாதுகாப்பான இடத்தில் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.