இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்தார் நடிகர் அஜித்குமார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரருமான நடராஜனின் 36- வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் நேற்று (ஏப்ரல் 03) நள்ளிரவு 12.00 மணிக்கு ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் நடராஜன் கேக் வெட்டினார். நடிகர் அஜித், நடராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.



-SXgDfGgJfO.jpg)