ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்! 

தேர்தல் விதிமுறையை மீறி செயல்படும் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகி வரும் பிரதமர் படத்தையும் நீக்க வலியுறுத்தியுள்ளனர். 

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரசு அலுவலகங்கள், அரசுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் பிரதமர் மற்றும் முதலமைச்சரின் ஆகியோரின் படங்களை அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் விதிமுறையை மீறி பிரதமரின் விக்சிட் பாரத் திட்டம் குறித்த காணொளி வெளியாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்படும் துணைவேந்தர் தமிழ்நாடு அரசின் உத்தரவுகளை மதிக்காமல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.