ட்ரெண்டிங்

டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைப்பு! 

தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனுவை மாவட்டத் தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். 

சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர், பா.ம.க. மற்றும் சுயேச்சைகள் என சுமார் 39 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (மார்ச் 28) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. 

மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்று வரும் வேட்பு மனு பரிசீலனையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது, சேலம் தி.மு.க. நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு சேலம் மேற்கு மற்றும் வடக்கு தொகுதி என 2 இடத்தில் வாக்கு இருப்பதாக அ.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதற்கான உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் எனக் கூறிய தேர்தல் அதிகாரி, டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு மீதான பரிசீலனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். 

அதேபோல், சுடுகாடு மற்றும் கலர் தொலைக்காட்சி ஊழல் வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான ஆவணங்களை டி.எம்.செல்வகணபதி தனது வேட்பு மனுவில் இணைக்காததால் சிக்கல் நீடிக்கிறது.