ட்ரெண்டிங்

தேடுதல் குழு- 4 பேர் விண்ணப்பம்! 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரைத் தேர்வுச் செய்வதற்கான தேடுதல் குழுவில் இடம் பெற 4 பேர் வேட்பு மனு அளித்துள்ளனர். 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை துணைவேந்தராக உள்ள ஜெகநாதனின் பதவிக்காலம் வரும் ஜூன் 30- ஆம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்காக தேடுதல் குழு அமைக்கப்படவுள்ளது. இந்த குழுவில் சிண்டிகேட் மற்றும் செனட் சார்பில் இடம் பெற 4 பேர் விருப்பம் தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் ஏப்ரல் 01- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. செனட் சார்பில் தேர்வு செய்ய தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் மட்டும் வேட்பு மனு அளித்துள்ளதால், அவர் போட்டியின்றி செய்யப்படவுள்ளார். 

சிண்டிகேட் சார்பில் தேர்வுச் செய்ய கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மணியன், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தங்கராஜு, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பிச்சுமணி ஆகியோர் வேட்பு மனுக்களை அளித்துள்ளனர். 

மூன்று பேர் வேட்பு மனு அளித்துள்ளதால் வரும் ஏப்ரல் 12- ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் தேர்தல் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பிரதிநிதிகள் அடங்கிய பட்டியல் உயர்கல்வித்துறைக்கு அனுப்பப்படும். அந்த குழுவிற்கு தலைமை வகிக்கும் வகையில் உயர்கல்வித்துறை தனது பிரதிநிதியாக ஒருவரை நியமனம் செய்து அறிவிக்கும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.