ட்ரெண்டிங்

பனங்கிழங்கில் உள்ள மருத்துவக் குணங்கள்!

 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கி, மார்ச் மாதம் வரை நான்கு மாதங்கள் பனங்கிழங்குகள் சீசன் ஆகும். இதன் காரணமாக, சேலம் மார்க்கெட்டுக்கு பனங்கிழங்குகள் வரத்து அதிகரித்துள்ளது.

 

குறிப்பாக, சேலம் மாநகரில் கடைவீதி, வாசவி மஹால் இறக்கம், பால் மார்க்கெட், ஆனந்தா இறக்கம், உழவர் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனங்கிழங்குகள் வரத்து அதிகரித்துள்ளது. பனங்கிழங்கு ஒன்று ரூபாய் 5- க்கும், 10 பனங்கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூபாய் 50- க்கும் விற்பனை செய்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது பனங்கிழங்கு. பனங்கிழங்கைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது; மேலும், உடலுக்கு தேவையான இரும்பு நார்ச்சத்து கிடைக்கும். அதேபோல், பனங்கிழங்கை இடித்து அதனுடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும், கருப்பட்டி சேர்த்தும், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்தும் பனங்கிழங்கை சாப்பிடலாம்.