ஆன்மிகம்

கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா- பக்தர்கள் குடிநீர் பாட்டில்களை வழங்கிய இஸ்லாமிய

கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா- பக்தர்கள் குடிநீர் பாட்டில்களை வழங்கிய இஸ்லாமியர்கள்!

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் சேர மன்னனர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த நிலையில், கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு, ஆகமவிதிகளின்படி, திருமுறைகள் ஓதப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

 

விழாவில் சுமார் 10,000- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், ஆங்காங்கே பல்வேறு சமூக அமைப்புகள் பக்தர்களுக்கு சுடச்சுட உணவுகளை வழங்கினர். அதேபோல், சேலம் ஜாமியா மஜித் முத்தவல்லி எஸ்.ஆர்.அன்வர் தலைமையிலான இஸ்லாமிய சகோதரர்கள் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்களை வழங்கி, மத நல்லிணக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்வு, அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

சுமார் 20,000 தண்ணீர் பாட்டில்களை விநியோகித்ததாக, இஸ்லாமிய சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.