ட்ரெண்டிங்

சேலம் மண்டலத்தில் ரூபாய் 151.60 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

 

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஜனவரி 13- ஆம் தேதி முதல் ஜனவரி 16- ஆம் தேதி வரை 4 நாட்களில் சுமார் ரூபாய் 725.5 கோடிக்கு விற்பனை நடந்துள்ளதாக தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

கடந்த ஆண்டை விட நடப்பாண்டு பொங்கல் பண்டிகையில் கூடுதலாக சுமார் ரூபாய் 46 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. குறிப்பாக, ஜனவரி 13- ஆம் தேதி ரூபாய் 185.65 கோடிக்கும், பொங்கல் தினமான ஜனவரி 14- ஆம் தேதி ரூபாய் 268.46 கோடிக்கும், ஜனவரி 16- ஆம் தேதி ரூபாய் 271 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. 

 

சாதாரண நாட்களின் மதுபானங்கள் விற்பனையை விட பொங்கல் விடுமுறை நாட்களில் 67% கூடுதல் மதுபானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மதுபானங்கள் விற்பனையில் திருச்சி மண்டலம் ரூபாய் 179 கோடியுடன் முதலிடமும், சேலம் மண்டலம் ரூபாய் 151.60 கோடியுடன் இரண்டாமிடமும் பிடித்துள்ளன.