ட்ரெண்டிங்

குடிநீர் குழாய் உடைப்பு....நேரில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ.!

 

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் அஸ்தம்பட்டியில் இருந்து 5 ரோடு வரை செல்லும் வழியில் பேர்லண்ட்ஸ் காவல் நிலையம் எதிரில் மற்றும் தென் அழகாபுரம் முன்பு அடிக்கடி குடிநீர் குடிநீர் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் அதிகம் உண்டாகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

 

இந்த சூழலில், தென் அழகாபுரம் முன்பு குடிநீர் குழாய் உடைப்புச் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதை நேரில் சென்று பார்வையிட்ட பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருள், மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதிகாரிகள் எம்.எல்.ஏ.விடம் கூறியதாவது, "பழைய பைப் லைன் என்பதனால் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. விரைவில் புதிய பைப் லைன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனக் கூறினார்கள்.

 

இதற்கு அருள் எம்.எல்.ஏ. கூறியதாவது, பொதுமக்களுக்கும்,போக்குவரத்துக்கும் பாதிப்பில்லாமல் இரவு நேரங்களில் பணியை செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.