ட்ரெண்டிங்

கடையில் இருந்த தண்ணீர் பாட்டில்களைத் தூக்கியெறிந்த தி.மு.க. பிரமுகர்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முத்துமலை முருகன் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள சாலையில் தண்ணீர் பாட்டில்களைத் தூக்கியெறிந்த தி.மு.க.வின் பேரூராட்சி மன்றத் தலைவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முத்துமலை முருகன் கோயில் வளாகத்தில் 100- க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில், தி.மு.க.வின் பேரூராட்சி மன்றத் தலைவர் அன்பழகன் சாலையை ஆக்கிரமித்துக் கடைகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

அத்துடன், கடைகளில் இருந்த தண்ணீர் பாட்டில்களையும், சாலையில் தூக்கியெறிந்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

முத்துமலை முருகன் கோயிலுக்கு நாள்தோறும் 1,000- க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் அங்குள்ள கடைகளில் நல்ல வியாபாரம் நடக்கிறது. குறிப்பாக, நடிகர்கள், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.