ட்ரெண்டிங்

சேலம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

வரும் மார்ச் 15- ஆம் தேதி சேலம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

வரும் மார்ச் 15- ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறவுள்ள பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். மார்ச் 15- ஆம் தேதி பிற்பகலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்கிறார்.

பின்னர் மார்ச் 16- ஆம் தேதி கன்னியாகுமரிக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெறவுள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். அங்கிருந்து ஆந்திராவிற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 18- ஆம் தேதி கோவைக்கு வந்து பேரணியாக பொதுக்கூட்டத்திற்கு செல்லத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.