ட்ரெண்டிங்

நாகர்கோவில்- பெங்களூரு இடையே பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 

நாகர்கோவில்- பெங்களூரு இடையே பண்டிகைக் கால சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தீபாவளி பண்டிகையையொட்டி, நாகர்கோவிலில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில் (ரயில் எண் 06083) நவம்பர் 07, 14, 21 ஆகிய தேதிகளிலும், பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (ரயில் எண் 06084) நவம்பர் 08, 15, 22 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

நாகர்கோவிலில் இருந்து இரவு 07.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 12.40 மணிக்கு பெங்களூருவைச் சென்றடையும். அதேபோல், மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 06.10 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.

இந்த ரயில் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.