சேலம் மாவட்டம், சங்ககிரி அக்கமாபேட்டையில் ஐவேலி ஊராட்சியில் 2.55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம, பராமரிப்பின்றி இருப்பதால் பெண்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்றத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஊராட்சி மன்ற அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து கழிப்பறையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர், சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற அதிகாரிகள் கூறுகையில், இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.


-SXgDfGgJfO.jpg)