ட்ரெண்டிங்

பொங்கல்: சேலம்- சென்னை விமானக் கட்டணம் கிடுகிடுவென -உயர்வு!

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம்- சென்னை, சென்னை- சேலம் ஆகிய வழித்தடங்களில் விமான சேவைக்கான கட்டணங்களை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் (Indigo Airlines) உயர்த்தியுள்ளது. 

 

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு விமானப் பயணக் கட்டணமாக ரூபாய் 4,076 முதல் ரூபாய் 7,121 வரையும், சென்னையில் இருந்து சேலத்துக்கு செல்வதற்கு விமானப் பயணக் கட்டணமாக ரூபாய் 3,957 முதல் ரூபாய் 10,539 வரையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

சாதாரண நாட்களில் மேற்கண்ட வழித்தடத்தில் விமானக் கட்டணமாக ரூபாய் 2,500 முதல் ரூபாய் 3,000 வரை மட்டுமே விமான நிறுவனம் கட்டணத்தை நிர்ணயித்திருந்தது.