ட்ரெண்டிங்

மைசூரு- மானாமதுரை இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 

சேலம் வழியாக மைசூரு- மானாமதுரை இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. 

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 11- ஆம் தேதி மைசூருவில் இருந்து மானாமதுரைக்கும், மறுமார்க்கத்தில் மார்ச் 12- ஆம் தேதி மானாமதுரையில் இருந்து மைசூருவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். 

 

இந்த சிறப்பு ரயில்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.