சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் கண்டு வருகிறது.
இன்று (மார்ச் 06) காலை 08.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 6,040 ரூபாயை தொட்டுள்ளது. அதேபோல், ஒரு சவரன் 200 ரூபாய் விலை உயர்ந்து 48,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 21 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூபாய் 2,400 உயர்ந்திருப்பது தங்க நகை வாங்குபவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.



