ட்ரெண்டிங்

தண்ணீரின்றி வறண்டுக் காணப்படும் அணையின் கிளை நதியான பாலாறு! 


சேலம் மேட்டூர் அணையின் கிளை நதியான பாலாறு தண்ணீரின்றி வறண்டதால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலையில் மழைப்பொழிவு முற்றிலுமாகக் குறைந்ததால் பாலாற்றில் கசிவுநீர் மட்டுமே வந்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது முற்றிலுமாக நீர்வரத்து நின்றுள்ளது. இதனால் பாலாறு தண்ணீரின்றி வறண்டு மணல் திட்டுகளாகக் காட்சியளிக்கிறது. 

சில்லென்று நீரோடையாக இருந்த பாலாறு தண்ணீரின்றி வறண்டதால், வெயிலின் தாக்கம் தகதகத்து வருவதால், யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி எல்லையோர கிராம பகுதிக்கு நுழைவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

இதனால் வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.