ட்ரெண்டிங்

பா.ஜ.க. நிர்வாகி அ.தி.மு.க.வில் ஐக்கியம்!

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் எஸ்டி பிரிவின் மாநிலச் செயலாளர் பாபண்ணா மற்றும் தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் உள்பட 30- க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

 

அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி ஏற்பாட்டில், பா.ஜ.க. எஸ்டி பிரிவு மாநிலச் செயலாளரும், குரும்பர் சங்கத்தின் மாநில தலைவருமான பாபண்ணா தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தாவக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் யசோதா பத்தியப்பா, அனுமந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் யசோதா மணி, குத்துமரணப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி முரளி, இருதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ், பா.ஜ.க.வைச் சேர்ந்த பேளூர் ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா வெங்கட்ராமன், தி.மு.கவைச் சேர்ந்த கோலட்டி ஊராட்சி மன்றத் தலைவர் நாராயணப்பா, உள்பட 30- க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, சேலம் மாவட்டம், நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.