ட்ரெண்டிங்

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கலானது!

தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.

வேளாண் பட்ஜெட்டில், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது, பயிர்களை அதிக உற்பத்திச் செய்யும் விவசாயிகளுக்கு பரிசு, வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம், விவசாய கடன் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

சட்டமன்றப் பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறை அதிகாரிகளுடன் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.