ட்ரெண்டிங்

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை!

 

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நடிகர் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.

 

கடந்த 2018- ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்தது தொடர்பாக, நடிகர் எஸ்.வி.சேகர் மீது தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்க செயலாளர் மிதார் மொய்தீன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்திருந்தனர். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறையும், ரூபாய் 15,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

இதனையடுத்து, அபராத தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக நடிகர் எஸ்.வி.சேகர் தரப்பில் மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.