ட்ரெண்டிங்

சேலம் வழியாக கோவை- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள்!

 

கோவை- சென்னை சென்ட்ரல் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடர் விடுமுறை முடிந்து ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும் ஜனவரி 28- ஆம் தேதி அன்று கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், ஜனவரி 29- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 

ஜனவரி 28- ஆம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை சென்ட்ரலைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், ஜனவரி 29- ஆம் தேதி மதியம் 01.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், இரவு 11.05 மணிக்கு கோவையைச் சென்றடையும். 

இந்த சிறப்பு ரயில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.