ட்ரெண்டிங்

உறுதிமொழி பதாகையில் கையெழுத்திட்ட வாக்காளர்கள்! 


சேலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியுடையவர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் தங்களது வாக்குப் பதிவினை செய்ய வேண்டும் என்றும், சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்து அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான சீ.பாலச்சந்தர் கேட்டுக் கொண்டார்.

கொண்டலாம்பட்டி மண்டல அலுவலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் வகையில் வாக்காளர் உறுதிமொழி பதாகையில் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றபோது இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அச்சமின்றியும், நேர்மையுடனும் வாக்களிப்பது கடமை தவறாமையாகும். தவறாமல் வாக்களிப்பது வாக்காளர்களின் கடமை. நேர்மையாக வாக்களிக்க உறுதி கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் உரிமை உள்ளவர்கள் ஒவ்வொருவரின் ஒட்டில் உள்ளது. தேர்தல் நாளன்று வாக்களிப்பவர்கள் இந்திய ஜனநாயகத்தில் வாக்களிக்கும் கடைமை ஆற்றி பெருமை கொள்ள வேண்டும்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்குப்பதிவு செய்யவேண்டும். முதல் மை உங்கள் கடமை. கடமையை தவறாமல் தேர்தல் நாளன்று நிறைவேற்ற வேண்டும். வாக்களிக்க தகுதியுடைய, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் வாக்களித்து 100% வாக்குப் பதிவு செய்ய நாம் அனைவரும் உறுதி செய்வோம்.