ட்ரெண்டிங்

அந்த 15 ஆண்டுகள் நூல் வெளியீட்டு விழா! 

சேலம் அண்ணா பூங்கா பின்புறம் அமைந்துள்ள தமிழ் சங்கம் அரங்கில் இன்று (ஏப்ரல் 27) காலை 11.000 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரைப்பட குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், சேலத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் தனபாலன் எழுதிய அந்த 15 ஆண்டுகள் என்ற நூலை வெளியிட்டார். 

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் டெல்லி கணேஷ், 15 ஆண்டுகள் விமானப்படையில் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொரு பக்கமும், நன்றாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். இந்த புத்தகம் எதிர்வரும் காலங்களில் ஏர்போர்ஸில் ஜாயின் பண்ண காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவியாக இருக்கும். விமானப்படை அவ்வளவு கத்துக் கொடுத்திருக்கு எங்களுக்கு; நாங்கள் கற்ற பாடம் எல்லாம் பள்ளிக் கூடத்தில் 
அல்ல; விமானப்படையில் தான் என்றார்.