ட்ரெண்டிங்

அரசியல் களத்தில் நடிகர் விஜய்.....ரசிகர்கள் உற்சாகம்!

 

தமிழக அரசியல் களத்தில் இறங்கினர் நடிகர் விஜய். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய். டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவுச் செய்துள்ளார்.

 

அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியதை அடுத்து, தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள், விஜய் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

 

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.