ட்ரெண்டிங்

முன்பதிவில்லாத வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சேலம் வழியாக எர்ணாகுளம் மற்றும் பெர்காம்பூர் இடையே முன்பதிவில்லாத வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 02. 09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து பெர்காம்பூருக்கும், மார்ச் 04, 11, 18, 25, ஏப்ரல் 01 ஆகிய தேதிகளில் பெர்காம்பூரில் இருந்து எர்ணாகுளத்திற்கும் ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், குண்டூர், நெல்லூர் விஜயவாடா, விஜயநகரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.