ட்ரெண்டிங்

ஆளுநரை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்"- மாமன்றக் கூட்டத்தில் ஈசன் இளங்கோ வலியுறுத்தல்!

 

சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்புக் கூட்டம், மாநகராட்சியின் மைய அலுவலகக் கூட்டரங்கில் இன்று (ஜன.31) காலை 11.00 மணிக்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் முன்னிலையிலும் மாமன்ற இயல்புக் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் பேசிய 34- வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ, "சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிப்பதற்காக தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அதை வணிக ரீதியாக பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர் மீது அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

சேலம் மாநகராட்சியில் மாடித்தோட்டம் அமைத்து உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாநகராட்சி நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களில் பெறப்படும் உரங்களை விலையில்லாமல் வழங்க வேண்டும். மாநகராட்சி பள்ளி விழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, குப்பைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்

 

75- வது குடியரசுத் தின விழாவைக் கொண்டாடிய நம் நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் நலத்திட்டங்களுக்கும் முடிவுகளுக்கும் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வரும் தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.