ட்ரெண்டிங்

குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

 

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 500 கனஅடிக்கும் கீழ் சரிந்ததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. 

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததாலும், கர்நாடகா அரசு தமிழகத்திற்கான காவிரியில் உரிய நீரை வழங்காததாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தை கடந்த சில தினங்களுக்கு பிறகு மீண்டும் 500 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 

 

அணைக்கான நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது நீர்வரத்து வினாடிக்கு 556 கனஅடியில் இருந்து 451 கனஅடியாகக் குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.