ட்ரெண்டிங்

துணைவேந்தர் கைது- அண்ணாமலை விமர்சனம்!

 

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற பாத யாத்திரையை சேலம் மாவட்டத்தில் இன்று (ஜன.03) காலை 10.00 மணிக்கு தொடங்கினார். அப்போது, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க.வின் சேலம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைத்தார்.

 

இந்த நிகழ்வின் போது, பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, நல்ல தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தியது தமிழக மக்களோடு பிரதமர் இணைந்துள்ளதைக் காட்டுகிறது. பிரதமர் வருகையால் தமிழக பா.ஜ.க.வினர் இடையே புது எழுச்சி ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்து மாநிலங்களுக்கு ரூபாய் 120 கோடி வழங்கப்பட்டுள்ளது.

 

தலைக்குனியக்கூடிய அளவில் சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கைது நடந்துள்ளது. துணைவேந்தரை நான்கு மணி நேரம் காவல்துறை வாகனத்தில் வைத்து சுற்றிக் கொண்டிருந்தனர். துணைவேந்தர் கைதில் காவல்துறை செயல்பாடு சரியில்லை. துணைவேந்தர் ஜெகநாதனை மணி நேரம் காவல்துறை வாகனத்தில் வைத்து சுற்றியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.