ட்ரெண்டிங்

கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்-போக்குவரத்து மாற்றம்!

கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்-போக்குவரத்து மாற்றம்!

 

வரும் அக்டோபர் 27- ஆம் தேதி சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, அன்றைய தினம் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

அம்மாபேட்டையில் இருந்து பட்டைகோவில் வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் தடைச் செய்யப்பட்டுள்ளது. மாற்றாக, அம்மாபேட்டை - பட்டைக்கோவில் - கமலா மருத்துவமனை - டவுன் ரயில்வே நிலையம்- முள்ளுவாடிகேட்- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - கொரானா சிலை ரவுண்டானா- ஆற்றோரம் சாலை இடதுபக்கம் திரும்பி - பழையபேருந்து நிலையம் செல்லலாம்.

 

பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அம்மாபேட்டை செல்லும் வாகனங்கள் அண்ணாசிலை- அப்பா டிரேடர்ஸ் பெட்ரோல் பங்க்- காந்தி சிலை- புலிக்குத்தி ஜங்சன்- அப்சரா இறக்கம் - கொரானா சிலை ரவுண்டானா- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- முள்ளுவாடிகேட் வழியாக செல்லலாம்.

 

அடிவாரம்- கன்னங்குறிச்சி- அஸ்தம்பட்டி- முள்ளுவாடிகேட்- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- திருவள்ளுவர் சிலை வழியாக பழையபேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் தடைச் செய்யப்பட்டுள்ளது.

 

மாற்றாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- கொரானா சிலை ரவுண்டானா- அப்சரா இறக்கம்- ஆற்றோரம் ரோடு- இடது புறம் வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லலாம். பழைய பேருந்து நிலையத்திலிருந்து அஸ்தம்பட்டி- அடிவாரம்- கன்னங்குறிச்சி செல்லும் வாகனங்கள்- அண்ணாசிலை- அப்பா டிரேடர்ஸ் பெட்ரோல் பங்க்- காந்திசிலை- புளிக்குத்தி ஜங்சன்- அப்சரா இறக்கம்- கொரானா சிலை ரவுண்டானா- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- முள்ளுவாடிகேட் வழியாக செல்லலாம்.

 

 

பால் மார்க்கெட் - அரசு மருத்துவமனை பழைய கேட் - நாட்டாண்மை கட்டிடம்- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- திருவள்ளுவர் சிலை வழியாக பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தடைச் செய்யப்பட்டுள்ளது.

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- கொரானா சிலை ரவுண்டானா- அப்சரா இறக்கம்- ஆற்றோரம் ரோடு -இடது புறம் திரும்பி பழைய பேருந்து நிலையம் செல்லலாம்.

 

பழைய பேருந்து நிலையத்திலிருந்து பால் மார்க்கெட் வழியாக செல்லும் வாகனங்கள் அண்ணா சிலை - அப்பா டிரேடர்ஸ் பெட்ரோல் பங்க் - காந்தி சிலை- புலிக்குத்தி ஜங்சன்- அப்சரா இறக்கம்- கொரானா சிலை ரவுண்டானா- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.