ட்ரெண்டிங்

கோவை- சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாகப் புறப்படும் என அறிவிப்பு!

கோவை- சில்சார் (Silchar) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து தாமதமாகப் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்பட்டு வரும் ரயில் கோவை-சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில். இந்த நிலையில், ஆந்திர மாநிலம், பாபட்லா ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், கோவை- சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12515) இன்று (அக்.08) இரவு 10.00 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டி இருந்த நிலையில், 4 மணி நேரம் தாமதமாக, அதாவது நாளை (அக்.09) அதிகாலை 02.00 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.