ட்ரெண்டிங்

குப்பைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள்! 

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்துள்ள தொட்டில்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அதில், மாணவ, மாணவியரின் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் அடங்கிய கண்காட்சி இடம் பெற்றிருந்தது. 

இதில் குப்பைகளைக் கொண்டு செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மாணவ, மாணவிகளின் படைப்புகளைப் பார்த்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் வியந்தனர். 

பின்னர், மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளுடன் தலைமையாசிரியருடன் இணைந்து குழு புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு, அந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஆண்டு விழாவில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தனர்.