ட்ரெண்டிங்

முடிந்தும் தொடரும் முதலீடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்தும், தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து முதலீடுகள் வந்துக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முடிந்தும் தொடரும் முதலீடுகள். நம் கைகளில் எப்போதும் இருக்கும் செல்போன்களைப் பாதுகாக்கும் Gorilla Glass-களை உற்பத்தி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த Corning International Corporation மற்றும் இந்தியாவைச் சேர்ந்த Optiemus Infracom Limited ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான Bharat Innovative Glass Technologies Private Limited – BIG TECH மற்றும் தமிழ்நாடு வழிகாட்டு தொழில் நிறுவனம் இடையே காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இலக்கை நோக்கி விரைவோம்! இளைஞர்கள் துணையோடு உயர்வோம்!". இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.