ட்ரெண்டிங்

வெள்ளி தொழிலாளர்கள் பொதுநலச்சங்கத்தின் சார்பில் நடந்த கவன ஈர்ப்பு ஒற்றுமை பேரணி!

வெள்ளிக் கொலுசு சாதாரண நடுத்தர சிறு, குறு மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிடும், வெள்ளிக் கொலுசு தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் வயிற்றில் அடித்து செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி ஒரு சில இடைத்தரகர்களும், கடந்த ஒரு மாத காலமாக வெள்ளி தொழிலாளர்களின் சிறு சிறு பட்டறைகளை மூடி சீல் வைத்து விடுவோமென அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்திட வேண்டும் வெள்ளி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கிடக் கோரி, தமிழ்நாடு வெள்ளி தொழிலாளர்கள் பொது நலச்சங்கத்தின் சார்பில் இன்று (செப்.11) காலை 11.00 மணிக்கு மாபெரும் கவன ஈர்ப்பு ஒற்றுமை பேரணி நடைபெற்றது.

இதில் செவ்வாய்பேட்டை, பெரிய கொல்லப்பட்டி, சின்னக்கொல்லப்பட்டி, அம்மாப்பேட்டை, பள்ளப்பட்டி என சேலம் மாநகரில் உள்ள வெள்ளி கொலுசுகளை உற்பத்திச் செய்யும் தொழிலாளர்களும், வெள்ளிப் பட்டறைகளின் உரிமையாளர்களும் என சுமார் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்ததை அடுத்து, தமிழ்நாடு வெள்ளித் தொழிலாளர்கள் பொதுநலச்சங்கத்தின் சேலம் மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது. 

தமிழகத்திலேயே வெள்ளிப் பொருட்களுக்கு பெயர் போனது சேலம் மாவட்டம். வெள்ளித் தொடர்புடைய அனைத்து பொருட்களும் இங்கு உற்பத்திச் செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.