ட்ரெண்டிங்

எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அ.தி.மு.க. மாநாடு அமைந்திருந்தது- அமைச்சர்

 

சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மதன்லால் திடலில், சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் இன்று (நவ.22) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. 

 

கூட்டத்தில் பேசிய தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பா.ஜ.க.வின் 9 ஆண்டுக்கால ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று கூறி, இந்தியா என்ற பெயரை மட்டும் மாற்றி 

பாரதம் என்று கொண்டு வந்துள்ளார். தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும். அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது இளைஞர் அணி தான், தலைமை சொல்வதை செய்து காட்டுவது தான் செயல் வீரர்கள்; எனவே, இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக அமைத்துத் தருவது உங்கள் கையில் தான் உள்ளது. 

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த மாநாடு அமைந்திருந்தது. ஆனால் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் தி.மு.க. கொள்கைகள் மற்றும் அதன் வரலாறு கூறப்படும். குறிப்பாக தி.மு.க.வின் மூன்றாண்டு கால ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொல்லியது, சொல்லாததையும் செய்து காட்டியுள்ளது. 

 

இதுக்கு முன்பாக பா.ஜ.க. 9 ஆண்டுகள் ஆட்சியில் 2023- க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்குவேன் என்று கூறி பிரதமர் பொறுப்பேற்றார். ஆனால் மீண்டும் தற்பொழுது தேர்தல் வந்துள்ள நிலையில் 2040- குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவேன் என்று கூறுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.